மாதுரி தீட்சித்தின் கனவில் வந்த சுனில் கவாஸ்கர்

Report Print Athavan in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasri.com

பாலிவுட்டின் முன்னாள் கனவுகன்னி மாதுரி தீட்சித், பிரபல கிரிக்கெட் ஜாம்பவன் சுனில் கவாஸ்கர் மீது பைத்தியமாக இருந்ததாக அவர், தனது 25 வயதில் அளித்த பேட்டி தற்போது வைரலாகியுள்ளது.

1992 ஆம் ஆண்டு நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட போது மாதுரி தீட்சித்தின் வயது 25. அப்போது, இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கரின் வயது 43.

நடிப்பில் முத்திரை பதித்த மாதுரிக்கு, சுனில் கவாஸ்கர் என்றால் அவ்வளவு ஆசையாம். அவர் எனது கனவில் வருவார். அவருடன் இணைந்து வாழ விரும்பவுதாகவும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

அவர், இந்தியாவுக்காக விளையாடுவதை மிகவும் ஆவலுடன் பார்த்துள்ளேன் என கூறியுள்ளார். அவர் அப்போது அளித்த பேட்டி தற்போது வைரலாகியுள்ளது.

சுனில் கவாஸ்கர் இந்திய அளவில் 10000 ரன்கள் கடந்த முதல் வீரர் ஆவார், டெஸ்ட் போட்டியில் 29 சதம் அடித்து டான் பிராட்மேன் சாதனையையும் முறியடித்துள்ளார்.

ஆனால் இந்த சாதனையை சச்சின் 2009 ஆம் ஆண்டு முறியடித்தார். 122 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள கவாஸ்கர் 10122 ரன்களும், 39 சதமும் அடித்துள்ளார். ஒரு நாள் போட்டியில்108 போட்டியில் பங்கேற்று 3092 ரன்களும் அடித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்