கவுதம் காம்பீருக்காக வருத்தப்பட்ட ஷாருக்கான்: காரணம் இதுதான்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்
365Shares
365Shares
lankasrimarket.com

ஐ.பி.எல்லின் 11வது சீசனில், கொல்கத்தா அணியில் கவுதம் காம்பீர் இடம் பெறாததால், அவரை தவற விடுகிறோம் என அணியின் உரிமையாளர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல் தொடருக்கான ஏலத்தில், அனைத்து அணிகளும் 5 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக் கொண்டு, ஏனைய வீரர்களை பொது ஏலத்தின் மூலம் எடுக்க வேண்டும் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், கொல்கத்தா அணியில் விளையாடி, 2012 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் பெற்றுத் தந்த கவுதம் காம்பீரை, கொல்கத்தா அணி ஏலத்தில் தக்கவைத்துக் கொள்ளவில்லை.

இதனால், தன்னை ஏலத்தின்போது ஏலம் கேட்க வேண்டாம் என்றும், ’Right-to-match’ card மூலமாகவும் தன்னை தக்க வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும், கவுதம் காம்பீர் நிர்வாகத்திடம் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, டெல்லி அணி 2.8 கோடிக்கு காம்பீரை ஏலத்தில் எடுத்தது. இந்நிலையில், காம்பீர் அணியில் இருந்து விலகியது குறித்து, ரசிகர் ஒருவர் ட்விட்டரில் ஷாருக்கானிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஷாருக்கான் கூறுகையில், ‘காம்பீரை தவற விடுகிறோம். Will miss him' என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்