ஐசிசியின் முதல் பெண் இயக்குனராகிறார் இந்திரா நூயி

Report Print Harishan in ஏனைய விளையாட்டுக்கள்
40Shares
40Shares
lankasrimarket.com

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசியின் முதல் பெண் இயக்குனராக பெப்சி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி இந்திரா நூயி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐசிசி என்னும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தன்னாட்சி பெண் இயக்குனரை தெரிவு செய்வதற்கான வாரியக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின் பேசிய ஐசிசி தலைவர் ஷசான்க் மனோகர், நிர்வாக ஆட்சி முறைக்கு உதவும் வகையில் கூடுதலாக ஒரு இயக்குனரை தெரிவு செய்யும் நோக்கத்தில் வாரிய கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் ஒருமனதாக இந்திரா நூயி இயக்குநராக தெரிவு செய்யப்பட்டுள்ளார், பெண் ஒருவர் இந்தப் பொறுப்புக்கு தேர்வாகி இருப்பது சிறப்புக்குரியது என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வரும் ஜூன் மாதம் இயக்குநராக பொறுப்பேற்கவுள்ள இந்திராவின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும்.

மேலும் 2 முறை அவருக்குப் பதவி நீட்டிப்பு வழங்க முடியும் என்ற வகையில் மொத்தம் 6 ஆண்டுகாலம் ஐசிசி இயக்குநராகப் பதவி வகிக்கலாம் என்று கூறப்படுகிறது.

பெப்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வரும் இந்திரா நூயி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முதல் பெண் இயக்குனர் என்ற பெருமையையும் தட்டிச் சென்றுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்