கோஹ்லிக்கு மாமனார் கொடுத்த காஸ்ட்லி கிப்ட் என்ன தெரியுமா?

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்
739Shares
739Shares
lankasrimarket.com

இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லியும் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களின் திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் கடந்து விட்டாலும், இவர்கள் தொடர்பான செய்திகள் வெளி வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் அனுஷ்கா சர்மாவின் தந்தையும், கோஹ்லியின் மாமனாருமான அஜய்குமார் கோஹ்லிக்கு கிப்ட் ஒன்றை வாங்கியுள்ளார்.

கோஹ்லிக்கு கவிதை என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் தேஜஸ்வினி திவ்யா நாயக் என்பவர் எழுதிய ஸ்மோக் அண்ட் விஸ்கி என்ற புத்தகத்தை கிப்ட்டாக கொடுத்துள்ளார்.

அதில் காதல் மற்றும் உறவு குறித்து 42 கவிதைகள் இடம் பெற்றுள்ளதாகவும், புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்ற போது, அஜய்குமார் மற்றும் அவரது மனைவி ஆஷிமா ஆகியோர் எழுத்தாளர் கையெழுத்துடன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

கோஹ்லி- அனுஷ்கா சர்மா தங்கள் திருமணத்தின் போது வந்திருந்த உறவினர்களுக்கு கவிஞர் ரூமியின் சூபி என்ற கவிதை புத்தகத்தை பரிசளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்