தினேஷ் கார்த்திக்கை வரவேற்ற ஷாருக்கான்: காரணம் இதுதான்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
Cineulagam.com

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவராக, தினேஷ் கார்த்திக் தெரிவு செய்யப்பட்டதை வரவேற்கும் விதமாக, அந்த அணியின் இணை நிறுவனர் ஷாருக்கான் ட்விட் செய்துள்ளார்.

இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில், கொல்கத்தா அணிக்கு புதிய அணித்தலைவராக விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து நடிகரும், கொல்கத்தா அணியின் இணை நிறுவனருமான ஷாருக்கான் கூறுகையில், ‘புதிய சீசனுக்காக தயாராக உள்ள கொல்கத்தா அணிக்கு, எங்கள் அணித்தலைவராக தினேஷ் கார்த்திக்கை வரவேற்கிறோம்.

இதுவரை இருந்த எங்களது அணித்தலைவர்களைப் போல, நீங்களும் எங்களை சுய மரியாதையுடனும், கண்ணியத்துடனும் வழி நடத்துவீர்கள்’ என தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் விக்கெட் கீப்பராக அனுபவம் பெற்றுள்ள தினேஷ் கார்த்திக், கடந்த 2009-10 ஆண்டுகளில் தமிழ்நாடு அணிக்கு தலைவராகவும், 2017ஆம் ஆண்டில் Duleep Trophyயின் போது Indian Red Team-க்கு தலைவராகவும் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்