ரஜினி பாடலுடன் டுவிட்டர் சாதனையை கொண்டாடிய அஸ்வின்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasrimarket.com

இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், டுவிட்டர் சாதனையை கொண்டாடும் விதமாக, ரஜினி பாடலை Dubsmash செய்து வெளியிட்டுள்ளார்.

சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், சமூக வலைதளமான டுவிட்டரில் எப்போதும் தனது கருத்துக்களை பதிவிட்டு வருபவர்.

இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமான ட்விட்களை வெளியிட்டுள்ள அவரை, பின் தொடர்வோரின் எண்ணிக்கை 8 மில்லியனை எட்டியுள்ளது.

இதனைக் கொண்டாடும் விதமாக, ரஜினி நடித்த பாட்ஷா படத்தில் இடம் பெற்ற ‘ரா.. ரா.. ராமையா’ பாடலை Dubsmash செய்து வெளியிட்டுள்ளார்.

அத்துடன் அவர் தனது பதிவில் கூறுகையில், ‘பாராட்டுகள், விமர்சனங்கள், வெற்றிகள், தோல்விகள் அனைத்தையும் நான் பெற்றுள்ளேன்.

கிரிக்கெட்டில் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து மேலேறி வருகிறேன், டுவிட்டரிலும் அதேபோலத்தான், 8 மில்லியன் என்கிற எண்ணிக்கையை எட்டியுள்ளேன்.

என் வாழ்வின் ஒரு பகுதியாக உள்ளதற்கு மிக்க நன்றி, நீங்கள் எனக்கு முக்கியமானவர்கள்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்