தேசிய பற்றில் சச்சின், கோஹ்லியை விஞ்சிய டோனி: எப்படி தெரியுமா?

Report Print Harishan in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasrimarket.com

இந்தியாவின் நட்சத்திர வீரர் டோனியின் ஹெல்மெட்டில் இந்திய தேசிய கொடி இடம்பெறாமல் இருப்பது குறித்து சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்துள்ளார்.

அவருக்கென இன்றளவும் பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு, அவரின் சாதனைகள் தான் இளம் வீரர்களுக்கு பெரும் இலக்காக இருந்து வருகிறது.

அவர் ஆரம்பித்து வைத்த ஒரு விஷயம் தான், ஹெல்மெட்டில் தேசியக் கொடி பொருத்திக் கொள்வது.

அதன் மூலம் வீரர்கள் தங்களின் தேசியப் பற்றை சற்று கூடுதலாக வெளிப்படுத்த முடியும் என பலர் கருதினர்.

தற்போதைய இந்திய அணித்தலைவர் கோஹ்லியின் ஹெல்மெட்டிலும் இந்திய தேசியக் கொடியை காண முடியும்.

ஆனால் டோனியின் ஹெல்மெட்டில் அது இருக்காது. அது ஏன்? என பலர் கேள்வி எழுப்பிய நிலையில் டோனி ரசிகர் ஒருவர் அளித்த விளக்கம் தான் சரியானது என தகவல் தெரிவிக்கின்றன.

ஏனெனில், டோனி விக்கெட் கீப்பராகவும் இருப்பதால் எந்நேரமும் ஹெல்மெட் அணிந்து கொள்ள முடியாது. சுழற்பந்து வீச்சாளர்கள் ஓவரை தவிர மற்ற நேரங்களில் ஹெல்மெட் தனக்கு பின்னால் இருக்கும் புல் தரையில் தான் விக்கெட் கீப்பர்கள் வைத்திருப்பார்கள்.

தேசியக் கொடி பொருத்திய ஹெல்மெட்டை தரையில் வைப்பதற்கு டோனி விரும்பாத காரணத்தால் தான் தனது ஹெல்மெட்டில் தேசியக் கொடியை தவிர்த்து விட்டாராம் டோனி.

மேலும், தேசியக் கொடிக்கு அளிக்க வேண்டிய உரிய மரியாதையை சில சமயங்களில் அளிக்க முடியாமல் போகும் என்பதால் தான் தனது ஹெல்மெட்டில் அவர் தேசியக் கொடியை பொருத்திக்கொள்ளவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்