பாலிவுட் நடிகையை திருமணம் செய்து கொள்ள விரும்பினார்: ஷமி மனைவி குற்றச்சாட்டு

Report Print Harishan in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
Cineulagam.com

விராட் கோஹ்லி போல் ஷமியும் பாலிவுட் நடிகையை திருமணம் செய்து கொள்ள விரும்பியதாக அவரது மனைவி ஹசின் ஜஹான் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அவரது மனைவி பரபரப்பு தகவலை நேற்று முன்தினம் வெளியிட்டிருந்தார்.

அதற்கு ஷமி மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், இன்று மற்றொரு பகீர் தகவலை ஷமி மனைவி ஹசின் ஜஹான் வெளியிட்டுள்ளார்.

அதாவது, திருமணத்திற்கு முன்னரே உறவினர் பெண் ஒருவரை ஷமி ஐந்து வருடங்களாக காதலித்து வந்ததாகவும், அந்த காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால் பாலிவுட் நடிகையை திருமணம் செய்து கொள்ள ஷமி விரும்பியதாகவும் ஹசின் கூறியுள்ளார்.

மேலும், “என்னை ஏமாற்றுவது போல் நாட்டையும் ஏமாற்றுகிறார். பாகிஸ்தானைச் சேர்ந்த அலிஸ்பா என்ற பெண்ணிடம் துபாயில் பணம் பெற்றுக் கொண்டார், இதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது.

அந்த காதலியுடன் தான் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செல்ல இருந்தார், 2 வருடங்களாக என்னிடம் விவாகரத்து கோரி வருகிறார், ஆனால் நான் தருவதாக இல்லை” என தெரிவித்துள்ளார் ஹசின் ஜஹான்.

ஷமி மீது அடுக்கடுக்காக இத்தனை குற்றச்சாட்டுகளை வைக்கும் அவரது மனைவிக்கு, ஷமி இரண்டாவது கணவர். முதல் கணவருடன் இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்