கொழும்பில் பலத்த பாதுகாப்புடன் தொழுகையில் ஈடுபட்ட வங்கதேச அணி வீரர்கள்

Report Print Ajith Ajith in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasrimarket.com

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி வீரர்கள் நேற்று கொழும்பில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக, நேற்றைய தினம் முக்கிய பகுதிகளில் இடம்பெற்ற முஸ்லிம்களின் தொழுகைகளுக்கு பலத்த பொலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வங்கதேச அணி வீரர்கள் கொழும்பில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த பள்ளிவாசலுக்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்