தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தில் புயலை கிளப்பிய புகைப்படம்: வெடித்த சர்ச்சை

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasrimarket.com

டர்பன் டெஸ்ட் போட்டியில் அவிஸ்திரேலியா மற்றும் தென ஆப்பிரிக்கா அணிகள் மோதிய போது வார்னருக்கும், டிக்காக்குக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அது கிரிக்கெட் ஆட்டத்தின் கண்ணியத்துக்கு எதிரானது என்று இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் வார்னர், குவிண்டன் டி காக் தன் மனைவி பற்றி அவதூறு செய்தார் என்று கூறியது பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

குவிண்டன் டி காக் என்ன அவதூறாகக் கூறினார் என்று வெளிவராத நிலையில், வார்னரின் மனைவி கேண்டிஸ் வார்னருக்கும் ரக்பி நட்சத்திரம் சோனி பில் வில்லியம்ஸுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஒரு உறவை அவதூறு செய்யும் விதமாக சோனி பில் வில்லியம்சின் முகமூடியை அணிந்து சில ரசிகர்கள் போர்ட் எலிசபெத் டெஸ்ட் போட்டிக்கு முன்னால் போஸ் கொடுக்க,

அவர்களுடன் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய அதிகாரிகளும் சேர்ந்து கொண்டு போஸ் கொடுத்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மட்டுமின்றி 2007-ல் சிட்னி மதுபான விடுதியில் ரக்பி நட்சத்திரம் சோனி பில் வில்லியம்சுக்கும் வார்னர் மனைவிக்கும் இடையே நடந்த ஒரு பாலியல் விவகாரத்தைச் சுட்டிக்காட்டும் விதமாக வார்னரை வெறுப்பேற்ற இத்தகைய கீழ்த்தரமான ஒரு செயலைச் செய்துள்ளதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தன் அதிகாரிகள் செயலுக்கும் தென் ஆப்பிரிக்க ரசிகர்களின் செயலுக்கும் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்