ஷமியால் யாருக்கும் துரோகம் செய்ய முடியாது: நச் பதில் கொடுத்த டோனி

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasrimarket.com

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியால் நாட்டுக்கும், மனைவிக்கும் துரோகம் செய்ய முடியாது என மகேந்திர சிங் டோனி தெரிவித்துள்ளார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது, அவரது மனைவி ஹசின் ஜகான் கொலை முயற்சி, குடும்ப வன்முறை போன்ற பல பரபரப்பான குற்றச்சாட்டுகளை பொலிசில் புகாராக அளித்தார்.

அதன் அடிப்படையில், ஷமியின் மீது பல பிரிவுகளின் கீழ் ஜாதவ்பூர் பொலிசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்திய முன்னாள் அணித்தலைவரும், விக்கெட் கீப்பருமான டோனி இது குறித்து கூறுகையில்,

‘முகமது ஷமி மிகவும் நல்லவர். அவரை நீண்ட காலமாக எனக்கு தெரியும். ஷமியால் நாட்டிற்கும், அவரது மனைவிக்கும் எந்த துரோகமும் செய்ய முடியாது. இது அவரது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை.

இதனை ஷமிதான் தீர்க்க வேண்டும். இந்த விவகாரத்தை ஊடகங்கள் பெரிதுபடுத்த கூடாது. அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் ஷமி மீண்டு வருவார்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்