குறி தவறாமல் துப்பாக்கியால் பல முறை சுட்ட டோனி: வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
106Shares
106Shares
lankasrimarket.com

இந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திர சிங் டோனி கை துப்பாக்கியால் தூரத்தில் இருக்கும் பொருட்களை சுடும் வீடியோ வைரலாகியுள்ளது.

ஐபிஎல் தொடரில் பிசியாக இருக்கும் டோனி தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் காலி மைதானத்தில் கை துப்பாக்கியை வைத்திருக்கும் அவர் எதிரில் இருக்கும் இரும்புகளை குறி பார்த்து சுடுகிறார்.

தொடர்ந்து சரியாக சுடும் டோனியின் குறி சில முறை மட்டுமே தவறி அருகிலிருக்கும் மணல் மீது படுகிறது.

அந்த வீடியோவோடு, விளம்பரத்துக்காக சூட்டிங் செய்வதை விட, துப்பாக்கியால் சூட்டிங் செய்வது ஜாலியாக உள்ளது எனவும் டோனி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்