பஞ்சாப்- சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டியில் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கிறிஸ் கெய்ல் 63 ரன்கள் விளாசினார்.
இதில், கெய்லுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடி, மீண்டு வந்திருப்பதில் மகிழ்ச்சி.
முக்கியமாக அணி வெற்றி பெற்றிருப்பதில் மகிழ்ச்சி. ஒரு கட்டத்தில் நிலையாக நின்றபின் பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுத்தபடியே இருக்க வேண்டும். அப்படியே செய்தேன்.
இதில் வென்ற பின், 25 வயது இளைஞனை போல உணர்கிறேன் என கூறியுள்ளார்.
மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்