விரக்தியில் விராட் கோஹ்லி

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasrimarket.com

ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூரு அணியை 46 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றியை பதிவுசெய்தது.

பெங்களூரு அணியில் அணித்தலைவர் கோஹ்லி மட்டும் நிலைத்து நின்றி ஆடி அரைசதம் கடந்தார். கோஹ்லி சிறப்பாக விளையாடி 92 ரன்கள் எடுத்தார்.

இதனால் இவருக்கு ஆரஞ்சு தொப்பி வழங்கப்பட்டது. இந்தத் தோல்வி நிலையில் இந்த ஆரஞ்சுத் தொப்பியை நான் அணிய விரும்பவில்லை. நாங்கள் தூக்கித்தான் எறிந்தோம், எங்கள் விக்கெட்டுகளை நாங்கள் பறிகொடுத்த விதங்களை மீண்டும் ஒரு முறை மனதில் அசைப்போட்டு பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது.

ஓரிரண்டு நல்ல கூட்டணிகள் எங்களுக்கு வெற்றி தேடித் தந்திருக்கும். மும்பை நன்றாகப் பந்து வீசினர், நன்றாக விளையாடினர். அவர்கள் அச்சமற்ற கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

நாங்கள் இயன்ற வரை போராடினோம் ஆனால் அவர்கள் விக்கெட்டுகளை தேவைப்படும் போது வீழ்த்த முடியவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்