பிரபல WWE மல்யுத்த வீரர் மரணம்: சக வீரர்கள் இரங்கல்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
107Shares
107Shares
lankasrimarket.com

பிரபல WWE மல்யுத்த ஜாம்பவான் ப்ரூனோ சமர்டினோ தனது 82-வது வயதில் மரணமடைந்துள்ளார்.

இத்தாலியில் பிறந்த ப்ரூனோ மல்யுத்த போட்டிகளில் பல்வேறு சாம்பியன்ஷிப் பட்டங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

ப்ரூனோ கடந்த 1981-ஆம் ஆண்டு மல்யுத்த போட்டிகளில் பங்கேற்பதிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் பின்னர் வர்ணனையாளராக தொடர்ந்து பணியாற்றி வந்தார்.

ப்ரூனோவின் மறைவுக்கு WWE நிறுவனம் தனது இரங்கலை வெளிப்படுத்தியுள்ள நிலையில் சக மல்யுத்த வீரர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதோடு பிரபல நடிகர் அர்னால்டும், ப்ரூனோ ஒரு ஜாம்பவான் என டுவிட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்