ரொனால்டோ இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்
674Shares
674Shares
lankasrimarket.com

போர்த்துகல் அணி நாக்-அவுட் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த அணியின் தலைவர் ரொனால்டோ குடும்பத்துடன் விடுமுறையை கழித்து வருகிறார்.

ரஷ்ய உலகக் கிண்ண கால்பந்து தொடரின் நாக்-அவுட் சுற்றில், கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்த்துக்கல் அணி 1-2 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியிடம் தோல்வியடைந்ததால், உலகக் கிண்ண தொடரில் இருந்து வெளியேறியது.

இது ரொனால்டோ ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர், கிளப் அணியான ரியல் மாட்ரிட்டில் இருந்து, இத்தாலியன் அணியான ஜூவண்டஸுக்கு ரொனால்டோ மாறியதாக வெளியான தகவலும் ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்தது.

இந்நிலையில், ரொனால்டோ தனது குடும்பத்தினருடன் கிரீஸ் நாட்டிற்கு சென்று விடுமுறையை கழித்து வருகிறார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்