சச்சினின் மகன் செய்த உதவி: பாராட்டித் தள்ளிய லார்ட்ஸ் நிர்வாகம்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்
315Shares
315Shares
lankasrimarket.com

இங்கிலாந்து- இந்தியா டெஸ்ட் போட்டியின் இடையே மழை குறுக்கிட்டபோது, ஆடுகளத்தை மூட சச்சினின் மகன் அர்ஜுன் உதவி செய்ததை லண்டன் லார்ட்ஸ் மைதான நிர்வாகம் வெகுவாக பாராட்டியுள்ளது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்தப் போட்டி மழையின் காரணமாக நேற்று அவ்வப்போது தடைபட்டது.

இந்நிலையில், மைதான உதவியாளர்கள் மழை பெய்தபோது உடனடியாக ஆடுகளத்தை மூடும் வேலையில் இறங்கினர். அப்போது சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுனும் அவர்களுடன் இணைந்து செயல்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, லார்ட்ஸ் மைதான நிர்வாகம் அர்ஜுனை வெகுவாக பாராட்டியுள்ளது.

இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் நிர்வாகம் கூறுகையில், இங்குள்ள எம்.சி.சி இளம் கிரிக்கெட் வீரர்களுடன் பயிற்சி பெறும் அர்ஜுன், எங்கள் ஆடுகள நிர்வாகிகளுக்கும் உதவி புரிந்துள்ளார். வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளது.

சமீபத்தில் இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை டேனியல் வியாட்டுடன், அர்ஜுன் இரவு உணவு சாப்பிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்