தொடர் வெற்றிகளால் தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறிய நவ்ஜோத் கவுர்!

Report Print Samaran Samaran in ஏனைய விளையாட்டுக்கள்
தொடர் வெற்றிகளால் தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறிய நவ்ஜோத் கவுர்!
0Shares
0Shares
lankasrimarket.com

சமீபத்தில் கிர்கிஸ்தானில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்ஸ் தொடரில் 65 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டு இந்தியாவின் மல்யுத்த வீராங்கனை நவ்ஜோத் கவுர் தங்க பதக்கம் வென்றார்.

நடைபெற்று வரும் புரோ மல்யுத்த லீக்கில் இந்தியாவின் பெங்களூரு யோதாஸ் அணிக்காக விளையாடி வரும் இவர், யுனைடெட் உலக மல்யுத்தம் வெளியிட்டுள்ள உலகத் தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இதே பிரிவில் பின்லாந்து வீராங்கனை பெட்ரா ஒலி முதல் இடத்தில் உள்ளார்.

2018 ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் 50 கிலோவிற்கு உட்பட்ட பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற வினேஷ் போகத் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

பஜ்ரஞ் புனியா, சாக்சி மாலிக், ஆகியோர் அவர்களுக்குரிய பிரிவில் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்