சிங்கப்பூரை அலங்கரிக்க தயாராகும் தானியங்கி கார்கள்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
சிங்கப்பூரை அலங்கரிக்க தயாராகும் தானியங்கி கார்கள்
0Shares
0Shares
lankasri.com
advertisement

லேட்டஸ்ட் தொழில்நுட்பத்தில் தானியங்கி கார்களே ட்ரெண்ட்டாகி வருகின்றது. இவ்வகை கார்களை சில நிறுவனங்கள் சோதனை பயணத்தில் ஈடுபடுத்தி வருகின்றமை தொடர்பான செய்திகள் கடந்த காலங்களில் அறிந்திருப்பீர்கள்.

குறித்த நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் Driverless Pods எனும் தானியங்கி கார்கள் சிங்கப்பூரில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

advertisement

முற்றிலும் மின்சக்தியில் இயங்கவுள்ள இக் கார்கள் இவ்வருட இறுதிக்குள் சிங்கப்பூர் வீதிகளை அலங்கரிக்கவுள்ளன.

எனினும் ஆரம்ப கட்டமாக வரையறுக்கப்பட்ட எல்லை அல்லது கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படவுள்ளது.

தானியங்கி கதவுகளையும் கொண்டு சிறிய அளவில் காணப்படும் இக் காரானது குறுகிய அகலம் கொண்ட பாதைகளிலும் பயணிக்கக்கூடியது.

தற்போது 4 வரையான பயணிகளை மட்டுமே சுமந்து செல்லக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

எனினும் அடுத்து கட்டமாக 24 பயணிகளை சுமந்து செல்லக்கூடியவாறு தானியங்கி கார்கள் வடிவமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments