ஸ்மார்ட் கைப்பேசிகள் ஹேக் செய்யப்படும் புதிய தொழில்நுட்பம் தொடர்பில் எச்சரிக்கை!

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
lankasrimarket.com

இணைய வளர்ச்சியானது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாக இருக்கின்ற போதிலும் பாதிப்புக்களும் இருக்கத்தான் செய்கின்றன.

அதிலும் தனிநபர் தகவல்கள் திருடப்படுகின்ற ஹேக்கிங் செயற்பாடு பாரிய எதிர்விளைவுகளை ஏற்படுத்துவதாக இருக்கின்றது.

இவ்வாறன நிலையில் தற்போது ஸ்மார்ட் கைப்பேசிகள் ஹேக் செய்யப்படக்கூடிய புதிய தொழில்நுட்பம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது ஸ்மார்ட் கைப்பேசிகளின் ஒலி அலைகளைப் பயன்படுத்தி அதிலுள்ள தரவுகளை திருட முடியும் என்பது அறியப்பட்டுள்ளது.

இதனால் சுமார் மில்லியன் கணக்கான ஸ்மார்ட் கைப்பேசிகள் ஹேக் செய்யப்படும் ஆபத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கைப்பேசிகள் மட்டுமல்லாது, ஸ்மார்ட் கைப்பட்டிகள், கார்கள் கூட ஹேக் செய்யப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இச் செயற்பாட்டினை “மியூசிக்கல் வைரஸ்” என அழைக்கின்றனர்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments