மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் புதிய முயற்சி: மனித குலத்திற்கு வரமா? அல்லது சாபமா?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

அசுர வேகத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் ஒரு சாதனத்திற்கு மாற்றீடாக பல சாதனங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இதேபோலவே கணனித் துறையில் தரவுகளைச் சேமிப்பதற்கும் நாடா ஊடகம், ஒளியியல் ஊடகம், காந்தவியல் ஊடகம் ஆகிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பல்வேறு சாதனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

advertisement

இன்று காந்தவியல் ஊடகமே அதி கூடிய சேமிப்பு தகைமையைத் தரக்கூடியதாக இருக்கின்றது.

ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி மனிதர்களின் DNA (பரம்பரை அலகு) இல் தரவுகளை சேமிக்கக்கூடிய சாத்தியம் தொடர்பில் மைக்ரோசொப்ட் நிறுவனம் ஆராய்ந்து வருகின்றது.

தற்போதுள்ள அதியுயர் சேமிப்பு தகைமையைக் கொண்டுள்ள சாதனத்தினை விடவும் இரண்டு மடங்கு தரவுச் சேமிப்பு இதில் சாத்தியம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் அடுத்து வரும் மூன்று வருடங்களில் DNA சேமிப்பு சாதனத்தினை அறிமுகம் செய்வதற்கும் மைக்ரோசொப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதேவேளை ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஹவார்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மரபியலாளர் ஒருவர் .JPG புகைப்படங்களை உள்ளடக்கிய புத்தகம் ஒன்றினை 55,000 DNA இற்குள் சேமிக்க முடியும் என நிரூபித்துள்ளார்.

எனினும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஆய்வின்படி ஒரு கிராம் DNA இனுள் 215 Petebytes (215 Million Gigabytes) தரவுகளை சேமிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எது எவ்வாறெனினும் இதற்கு தேவையான DNA களை மனிதர்களில் இருந்தே பெறவேண்டியிருப்பதனால் எதிர்காலத்தில் மனிதர்கள் பல்வேறு சங்கடங்களை எதிர்நோக்க வேண்டியும் ஏற்படலாம்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments