தானியங்கி கார்களில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்களிப்பை உறுதிப்படுத்தினார் டிம் குக்!

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

முன்னணி கார் வடிவமைப்பு நிறுவனங்கள் சில தானியங்கி கார்களை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளமை தெரிந்ததே.

இவற்றில் கூகுள் உட்பட சில நிறுவனங்கள் தமது கார்களை பரிசோதனை முயற்சியிலும் ஈடுபடுத்தியிருந்தது.

advertisement

ஆப்பிள் நிறுவனமும் தானியங்கி கார் வடிவமைப்பில் காலடி பதித்திருந்த நிலையில் பின்னர் பின்வாங்கியிருந்தது.

எனினும் தானியங்கி கார்களுக்கான மென்பொருள் வடிவமைப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயற்பாட்டு அதிகாரியான டிம் குக் தகவல் வெளியிட்டுள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே இந்த தகவலை அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்கு தாயாக விளங்கவுள்ள இந்த மென்பொருளினை விரைவில் காணலாம் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இம்மென்பொருள் வடிவமைப்பில் வேறேதும் நிறுவனங்களும் இணைந்து பணியாற்றுகின்றதா என்பது தொடர்பில் அவர் எந்த தகவலையும் தெரிவித்திருக்கவில்லை.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments