வீட்டுத்தோட்டத்தில் வேலை செய்யும் ரோபோ

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
lankasri.com

தற்போதைய காலத்தில் ரோபோ வடிவமைப்பானது புதிய பரிமாணத்தை நோக்கி நகர்ந்துவருகின்றது.

அதாவது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கொண்டு மனிதனுக்கு நிகராக சிந்தித்து செயற்படக்கூடிய வகையில் வடிவமைக்கும் முயற்சிகள் தொடர்ந்து வருகின்றன.

இப்படியிருக்கையில் வீட்டுத்தோட்டங்களில் வளரும் களைகளை கொல்லக்கூடி புதிய ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

Tertill எனும் இந்த ரோபோவை Franklin Robotics குழு வடிவமைத்துள்ளது.

இந்த ரோபோவானது முற்றிலும் சூரிய மின்சக்தியில் செயற்படக்கூடியதாக காணப்படுகின்றது.

குறித்த ரோபோவை பயன்படுத்தி களைகளை கொல்ல முடிவதால் எதிர்காலத்தில் கிருமிநாசினிகள் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிதி திரட்டல் நடவடிக்கைக்காக Kickstarter தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள இந்த ரோபோ 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் விற்பனைக்கு வரவுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments