ஆயிரக்கணக்கான மரபணுக்களை ஒரே எதிர்வினையில் நகலெடுக்கும் தொழில்நுட்பம் உருவாக்கம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

தொழில்நுட்பமானது நாளுக்கு நாள் அசுர வேகத்தில் வளர்ந்து வருகின்றது, இவற்றில் மரபணுத்தொழில்நுட்பமும் ஒன்றாகும்.

இந்த மரபணுத் தொழில்நுட்பத்தில் தற்போது மற்றுமொரு புரட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

advertisement

அதாவது ஒரே தருணத்தில் ஆயிரக்கணக்கான மரபணுக்களை குளோனிங் முறையில் நகல் செய்ய முடியும்.

இந்த தொழில்நுட்பமானது LASSO என அழைக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் நியூ ஜேர்ஸியிலுள்ள Rutgers பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழு ஒன்றே இப் புதிய தொழில்நுட்பத்தினை கண்டுபிடித்துள்ளது.

ஆய்வின்போது E.coli பக்டீரியாவின் DNA இயிலிருந்து 3,000 வரையான துண்டுகளை நகல் செய்துள்ளது.

இது 75 சதவீதம் வெற்றிகரமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments