கூகுளின் தாய் நிறுவனம் மீது குற்றம்சுமத்தியவர் பணிநீக்கம்

Report Print Fathima Fathima in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
lankasri.com
advertisement

கூகுளின் தாய் நிறுவனமான Alphabet Inc-ல் பொறியாளராக பணியாற்றுபவர் ஜேம்ஸ் டாமோர், இவர் கடந்த வாரம் உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை ஒன்றை அளித்திருந்தார்.

அதில், நிறுவனத்தில் ஆண்- பெண் பாகுபாடு பார்க்கப்படுவதாகவும், தொழில்நுட்பதுறை மற்றும் தலைமை பொறுப்புகள் பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நிறுவனத்தின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி ஜேம்ஸை பணியை விட்டு நீக்கியுள்ளது கூகுள்.

இதுகுறித்து தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, ஜேம்ஸ் அனுப்பிய அறிக்கையில் பாலின வேறுபாட்டை பற்றி வரம்பு மீறி இருந்தாகவும், நிறுவன விதிமுறைகள் மீறப்பட்டிருந்த காரணத்தினாலும் பணி நீக்கம் செய்துள்ளதாக விளக்கமளித்துள்ளார்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்