ஆப்பிளை எச்சரித்த டிராய் அமைப்பு

Report Print Printha in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
lankasrimarket.com

இந்தியாவில் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு தேவையற்ற அழைப்புகளை தவிர்ப்பதற்கும், வாடிக்கையாளர்களின் புகார்களை நேரடியாக கொடுப்பதற்கும் டிராய் (TRAI) அமைப்பு டு நாட் டிஸ்டர்ப் (Do-Not-Disturb) என்ற ஆப்பை அறிமுகப்படுத்தியது.

இந்த ஆப்பை ஆண்ட்ராய்டு பயனாளர்கள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியையும் கொண்டுவந்தது.

இந்நிலையில் கடந்த வருடம் ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்ட Do-Not-Disturb ஆப்பை, ஆப்பிள் நிறுவனம் தனது ஆப் ஸ்டோரில் இடம்பெறச் செய்யவில்லை.

அதனால் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அமைப்பு ஆப்பிள் நிறுவனத்தை கண்டித்துள்ளது.

இதுகுறித்து டிராய் அமைப்பின் சேர்மன் ஆர்.எஸ்.சர்மா பேஸ்புக் உடன் வர்த்தகக் காரணங்களுக்காக டேட்டாவை பகிரந்து கொள்ளும் போது, அதையே ஏன் டிராயுடன் இணைக்க மறுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு ஆப்பிள் நிறுவனத்தின் தொழில்நுட்பம் இன்னும் பூர்த்தி செய்யவில்லை, அதனால் டிராய் அமைப்பின் Do-Not-Disturb (DND) ஆப் இடம்பெறவில்லை என்று தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்