புதிய தலைமுறை புரோசசரை விரைவில் அறிமுகம் செய்கின்றது இன்டெல்!

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
lankasri.com

கணனி வகைகள் மற்றும் மொபைல் சாதனங்களின் மூளையாகக் கருதப்படுவது புரோசசர் ஆகும்.

இதனை பல்வேறு முன்னணி நிறுவனங்கள் வடிவமைத்து வருகின்றன.

எனினும் நீண்ட காலமாக புரோசசர் தயாரிப்பில் கொடிகட்டிப் பறக்கும் நிறுவனமாக Intel விளங்குகின்றது.

இந்த நிறுவனம் தற்போது 8வது தலைமுறை புரோசசரினை அறிமுகம் செய்ய தயாராகிவருகின்றது.

இதன்படி இம்மாதம் 21 ஆம் திகதி அறிமுகம் செய்து வைக்கவுள்ளது.

உத்தியோகபூர்வமாக இடம்பெறவுள்ள இந்நிகழ்வானது Facebook Live ஊடாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்