சூழலில் ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்பை தவிர்க்க புதிய முயற்சி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
lankasrimarket.com

சம காலத்தில் பூமி வெப்பமடைதல் அதிகமாகிக்கொண்டே போகின்றது.

மரங்களை வெட்டுதல் போன்ற பல மனித செயற்பாடுகளே பிரதான காரணமாக விளங்குகின்றன.

எனினும் அதிகரிக்கும் சூழல் வெப்பநிலையை கட்டுப்படுத்த பல்வேறு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது நகரங்களுக்கு இடையில் வெப்ப அதிகரிப்பை கட்டுப்படுத்த அங்குள்ள வீதிகளுக்கு குளிச்சி கொண்ட வர்ணங்கள் (Paint) பூசப்பட்டு வருகின்றன.

இம் முயற்சி முதன் முறையாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் நகரத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வழமையான தார் அல்லது கார்பெட் வீதிகள் கறுப்பாக இருப்பதனால் வெப்பத்தை அகத்துறுஞ்சி வைத்திருக்கும்.

இது பயணிகளுக்கு மேலும் அசௌகரியத்தினை ஏற்படுத்தும்.

எனவே அவ் வீதிகளுக்கு CoolSeal எனும் படையினைக் கொண்ட விசேட வர்ணம் பூசப்பட்டு வருகின்றது.

இவ் வர்ணம் பூசப்பட்ட பகுதியில் வெப்பநிலையானது 5 டிகிரி செல்சியசினால் குறைக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்