வாட்ஸ் அப்பிலிருந்து வெளியேறுகிறார் இணை நிறுவனர் பிரையன் ஆக்டன்

Report Print Fathima Fathima in ஏனைய தொழிநுட்பம்
75Shares
75Shares
lankasrimarket.com

வாட்ஸ் அப்பின் இணை நிறுவனரான பிரையன் ஆக்டன் அந்நிறுவனத்திலிருந்து வெளியேறப்போவதாக அறிவித்துள்ளார்.

2009ம் ஆண்டு பிரையன் ஆக்டன் மற்றும் ஜேன் கோம் இணைந்து உருவாக்கியது தான் வாட்ஸ் அப்.

உலகம் முழுதுவம் மில்லியன் கணக்கான பயனர்களை கொண்ட வாட்ஸ் அப்பை, 2014ம் ஆண்டு பேஸ்புக் வாங்கியது.

இந்நிலையில் வாட்ஸ் அப் நிறுவனத்திலிருந்து வெளியேறப் போவதாக அறிவித்துள்ளார் இணை நிறுவனரான பிரையன் ஆக்டன்.

லாப நோக்கமில்லாத தகவல் தொடர்பு சார்ந்த நிறுவனத்தை உருவாக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

மேலும் இது கடினமான முடிவு தான் என்றாலும், வாட்ஸ் அப்பின் சாதனைகளை எண்ணிப் பெருமைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்