டாட்டூ வரைதலின் பின்னால் இருக்கும் இந்த மர்மம் பற்றி அறிவீர்களா?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
lankasri.com

உலகப் பிரபலங்கள் ஆரம்பித்து வைத்த டாட்டூ வரையும் பழக்கம் இன்று பட்டி தொட்டி எங்கும் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

ஆனால் இதன் பின்னால் பல ஆபத்துக்கள் இருப்பதாக மருத்துவர்கள் ஏற்கனவே பல தடைவைகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறிருக்கையில் மற்றுமொரு அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது நிரந்தரமான டாட்டூக்கள் வரைவதற்கு பயன்படுத்தப்படும் மையில் உள்ள நனோ துணிக்கைகள் இரத்தத்துடன் சேர்ந்து உடலின் அனைத்து பகுதிகளுக்கும் பரவும் தன்மை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாட்டூக்கள் மூலம் மாசுக்களும், நனோ துணிக்கைகளும் உடலில் பரவுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும்.

இதேவேளை அதிகளவான மையானது உடலின் நிர்ப்பீடனத் தொகுதியினால் அகத்துறுஞ்சப்படுகின்றமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனை European Synchrotron அமைப்பினைச் சேர்ந்து ஆராய்ச்சியாளர்களே கண்டறிந்துள்ளனர்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்