Spotify குரல் வழி கட்டளை விரைவில் Google Assistant சாதனங்களில்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
Cineulagam.com

முன்னர் Google Home இல் மட்டுமே Spotify குரல் வழி கட்டளை செயற்படக்கூடியதாக இருந்தது.

ஆனால் விரைவில் அனைத்து வகையான Google Assistant சாதனங்களிலும் இவ் வசதி கிடைக்கப்பெறும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இவ் வசதியினை இலவச Spotify கணக்கு மற்றும் ப்ரீமியம் Spotify கணக்கு வைத்திருக்கும் இருசாராரும் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த அறிவித்தலானது Google Home Max உட்பட சில புதிய சாதனங்களை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்து வைத்தபோது வெளியிடப்பட்டுள்ளது.

Google Home Max என்பது ஆப்பிளின் HomePod மற்றும் Sonos என்பவற்றுக்கு போட்டியாக உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் ஹோம் ஸ்பீக்கர் ஆகும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்