இதயத்தின் ஆரோக்கிய குறைபாட்டால் இப்படியும் ஒரு பாதிப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
lankasrimarket.com

மனிதர்களில் ஏற்படக்கூடிய மறதி நோயாகக் கருதப்படும் அல்ஸைமர் நோய்க்கும் இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதாவது இருதயத்தின் ஆரோக்கியம் குறைவடையும்போது ஏனைய அங்கங்களுக்கு குருதி கொண்டு செல்லப்படும் வினைத்திறன் குறைகின்றது.

இதனால் மூளைக்கான குருதிச் சுற்றோட்டமும் மந்த நிலையை அடைகின்றது. எனவே அல்ஸைமர் நோய்க்கு இது காரணமாக அமைகின்றது என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த ஆய்வினை அமெரிக்காவில் உள்ள Vanderbilt University Medical Center விஞ்ஞானிகளே மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆய்விற்காக சராசரியாக 73 வயதினை உடைய 314 நபர்களை ஈடுபடுத்தியுள்ளனர். இவர்களில் 39 சதவீதமானவர்கள் லேசான அறிவாற்றல் குறைபாடு உடையவர்களாக காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் இவர்களில் அல்ஸைமர் அல்லது மனநோய் தாக்கம் அதிகமாக காணப்பட்டுள்ளது. எஞ்சியவர்கள் சாதாரண புலனுணர்வு செயற்பாட்டினைக் கொண்டிருந்துள்ளனர்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்