புத்தம் புதிய தோற்றத்துடன் அறிமுகமாகின்றது கூகுள் மேப்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
lankasrimarket.com

கூகுள் நிறுவனத்தின் மேப் வசதியை பயன்படுத்தாதவர்கள் இருக்கவே முடியாது, அந்த அளவிற்கு அவசியமானதும், பிரபல்யமானதுமாகும்.

இவ் வசதியை தரும் மொபைல் அப்பிளிக்கேஷனை புதிய தோற்றத்துடன் அறிமுகம் செய்யவுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இப் பதிப்பானது முன்னைய பதிப்பினை விடவும் தெளிவு கூடியதாக காணப்படுகின்றது.

அத்துடன் ஒருவரது பயணத்துடன் தொடர்புடைய பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அப்பிளிக்கேஷனின் நிறங்களிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, இப் புதிய பதிப்பானது அடுத்துவரும் ஓரிரு வாரங்களுக்கு அறிமுகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்