இக்கட்டான தருணங்களில் தன்னைத்தானே அழிக்கும் ட்ரோன் விமானம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
lankasrimarket.com

பாரம் குறைந்த பொருட்களை டெலிவரி செய்வதற்காக ட்ரோன் ரக விமானங்களை அமேஷான் நிறுவனம் வடிவமைத்து பயன்படுத்தி வந்தது.

இவ்வாறான ட்ரோன் கமெராவில் தற்போது மற்றுமொரு தொழில்நுட்பத்தினை அமேஷான் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

அதாவது இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்படும்போது தன்னைத் தானே அழிக்கக்கூடிய வகையில் புதிய ட்ரோன் விமானம் உருவாக்கப்பட்டுள்ளது.

நிலத்தில் விழ நேரிடும்போதோ, கட்டிடங்களில் மோத நேரிடும்போதோ அல்லது யாராவது சேதம் விளைவிக்க முற்படும்போதோ இவ்வாறு தானாக அழிவடைந்துவிடும்.

இதற்காக விசேட கட்டுப்பாட்டு தொழில்நுட்பம் ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது விமானத்தின் பாகங்களை வேறாகப் பிரித்துவிடும்.

இவ்வாறு பிரிந்த பாகங்கள் வெவ்வேறு இடங்களில் விழுந்துவிடும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்