லண்டனில் பிரம்மாண்டமாக தயாராகும் பேஸ்புக் நிறுவனம்

Report Print Kabilan in ஏனைய தொழிநுட்பம்
175Shares
175Shares
lankasrimarket.com

புகழ்பெற்ற சமூக வலைதளமான பேஸ்புக், தங்களது புதிய நிறுவனத்தை லண்டனில் முதல்முறையாக திறக்க உள்ளது.

கடந்த 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பேஸ்புக் நிறுவனம், 2000 பணியாளர்களுடன், 15 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. உலகின் 100 சிறந்த இணையதளங்களுள் ஒன்று எனும் விருதினை, பேஸ்புக் கடந்த 2007ஆம் ஆண்டு தட்டிச் சென்றது.

இதன் தலைமைச் அலுவலகம், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக லண்டன் நகரிலும், பிரம்மாண்டமாக தங்களது

நிறுவனம் ஒன்றை பேஸ்புக் நிறுவியுள்ளது. இந்த நிறுவனம் 2018ஆம் ஆண்டு முதல் செயல்படும் எனவும், முதற்கட்டமாக 800 பணியாளர்கள் வேலை செய்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, பிரித்தானியா அரசுடன் ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதால், அடுத்த ஆண்டு இறுதிக்குள் லண்டன் நிறுவனத்தில் 2,300 பேர் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிறுவனத்தில் பேஸ்புக்கின் தொழில்நுட்பப் பணிகள் மற்றும் இணையதள பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்