இன்று அனைவராலும் அனுப்பப்படும் குறுஞ்செய்திக்கு வயது எத்தனை தெரியுமா?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
Cineulagam.com

மொபைல் சாதனங்கள் மட்டுமன்றி இணையத்தளங்கள் ஊடாகவும் குறுஞ்செய்திகள் அனுப்புதல் இன்று உலகப் பிரபல்யம் வாய்ந்த தொடர்பாடல் முறையாக இருக்கின்றது.

எனினும் இது எப்போது ஆரம்பிக்கப்பட்டது? குறுஞ்செய்திக்கு இன்று எத்தனை வயது? என்ற தகவல்கள் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

முதன் முறையாக 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் திகதியே மொபைல் போனின் ஊடாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

இதில் “Merry Christmas” என்ற தகவல் பிரித்தானியாவை சேர்ந்த Neil Papworth எனும் புரோகிராமரால் அனுப்பப்பட்டது.

இவ்வாறு அனுப்பப்பட்டு நேற்றைய தினத்துடன் 25 வருடங்கள் ஆகின்றன.

இதனால் குறுஞ்செய்திக்கு வயது 25 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறுஞ்செய்தி அனுப்புதல் தொடர்பான கணக்கெடுப்பு ஒன்றில் 2007ம் ஆண்டு பிரித்தானியாவில் மட்டும் 66 பில்லியன் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை 2012ம் ஆண்டில் 151 பில்லியனாக அதிகரித்துள்ளது.

எனினும் வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக் மெசஞ்சரின் வருகையின் பின்னர் 2015ம் ஆண்டு காலப் பகுதியில் 30 பில்லியன் குறுஞ்செய்திகள் நாள் தோறும் பரிமாறப்பட்டுள்ளன எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்