கூகுளின் புதிய Files Go அப்பிளிக்கேஷன் பற்றி தெரியுமா?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
lankasri.com

கூகுள் நிறுவனமானது Files Go எனும் புத்தம் புதிய அப்பிளிக்கேஷனை உலகம் முழுவதிலும் பயன்படுத்தக்கூடிய வகையில் வெளியிட்டுள்ளது.

இந்த அப்பிளிக்கேஷன் ஆனது மொபைல் சாதனங்களில் கோப்புக்களை வினைத்திறனான முறையில் கையாள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

பழைய படங்களை அழித்தல், இரட்டிப்படைந்த கோப்புக்களை அழித்தல், சட் செய்யப்பட்ட மீம்ஸ்கள் மற்றும் பயன்பாட்டில் இல்லாத அப்பிளிக்கேஷன்களை அழித்தல் என்பனவற்றுடன் Cache கோப்புக்களை அழித்தல் என்பவற்றினையும் மேற்கொள்ள முடியும்.

இவ்வாறு செய்வதன் ஊடாக 1GB வரையிலான சேமிப்பு நினைவகத்தினை மீதப்படுத்த முடிகின்றது.

தவிர 125Mbps வேகத்தில் புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள் என்பவற்றினை பரிமாற்றம் செய்துகொள்ளவும் முடியும்.

இதனை அன்ரோயிட் சாதனங்களில் நிறுவிப் பயன்படுத்த முடியும்.

இணையத்தள முகவரி

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்