செல்போனை அருகில் வைத்து உறங்கினால் புற்றுநோய் அபாயம்

Report Print Harishan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
lankasrimarket.com

செல்போனை அருகில் வைத்துக்கொண்டு தூங்கினால் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கலிபோர்னிய சுகாதார ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் தங்களின் செல்போனை அருகில் வைத்துக்கொண்டு தூங்குவதை பழக்கமாக வைத்துள்ளனர்.

அலாரம் வைப்பது, சமூக வலைதளங்களை இரவில் அதிகம் பயன்படுத்துவது உள்ளிட்டவற்றை முடித்த பின் கைப்பேசியை அருகில் வைத்தபடி தூங்குவதால் பல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது தெரியவந்துள்ளது.

செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் ஒருவித ரேடியோ அதிர்வலைகள் செல்போன் மூலம் நம்மை தாக்குவதால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக California Department of Public Health (CDPH) தெரிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து California Department of Public Health (CDPH) இயக்குநரும் மாநில பொது சுகாதர அதிகாரியுமான Dr.Karen Smith கூறுகையில், விஞ்ஞானம் பெரிய அளவில் வளர்ந்து இருந்தாலும் இதுபோன்ற கதிர்வீச்சுகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்றால் இரவில் கைப்பேசியை அருகில் வைத்துக்கொண்டு தூங்குவதை தவிர்ப்பது நல்லது என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் மூளையில் கட்டிகளுடன் வரும் நோயாளிகளில் பெரும்பாலானோர் பத்து வருடத்திற்கு மேலாக செல்போனை அருகில் வைத்துக்கொண்டு தூங்கும் பழக்கத்தை கொண்டவர்களாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்