உலகிலேயே முதன் முறையாக 8K OLED திரையினை அறிமுகம் செய்யும் LG

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
179Shares
179Shares
lankasrimarket.com

தற்போது அதி துல்லியமான காட்சிகளை காண்பிக்கக்கூடிய 4K தொழில்நுட்பமானது பாவனையில் உள்ளது.

ஆனால் அதனையும் தாண்டி முதன் முறையாக இரு மடங்கு துல்லியம் வாய்ந்த 8K OLED திரையினை அறிமுகம் செய்யவுள்ளதாக LG நிறுவனம் அறிவித்துள்ளது.

88 அங்குல அளவுடைய இந்த இராட்சத திரையானது முதன் முறையாக இம் மாதம் Las Vegas இல் இடம்பெறவுள்ள Consumer Electronics Show நிகழ்வில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

மேலும் இத் திரையானது 7680 x 4320 Pixel Resolution உடையதாகவும் காணப்படுகின்றது.

எனினும் இத் திரையின் விலை உட்பட ஏனைய சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்