சமகாலத்தில் எரிபொருட்கள் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் கார்கள் பயன்பாட்டில் உள்ளமை தெரிந்ததே.
அதேபோன்று பகுதியளவில் சூரிய மின்சக்தியில் இயங்கும் கார்களும் உள்ளன.
ஆனால் முற்று முழுதாக சூரிய மின்சக்தியில் இயங்கக்கூடிய கார்கள் 2019ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
காலநிலை மாற்றங்களை பாதுகாக்கும் நோக்கிலேயே இக் கார்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.
இக் கார்களை Lightyear எனும் நிறுவனம் வடிவமைத்துவருகின்றது.
முதன் முறையாக 10 கார்கள் 2019ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.