குழந்தைகளில் உண்டாகும் கிருமித் தொற்றுக்களை கண்டறிய ரோபோ பேபி உருவாக்கம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
Cineulagam.com

குழந்தைகள் பிறந்த ஒரு வருட காலத்திற்குள் தவழ ஆரம்பிக்கின்றன.

இக் காலப் பகுதியில் அழுக்குகள், கிருமித் தொற்றுக்கள் என்பன ஏற்பட அதிக வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.

எனவே எவ்வாறான பகுதிகளில் அழுக்குகள் மற்றும் கிருமித் தொற்றுக்கள் அதிகம் காணப்படுகின்றன என்பதை கண்டறிந்து அப் பகுதிக்குள் குழந்தைகள் செல்வதை தவிர்க்க முடியும்.

இதற்கு உதவக்கூடிய வகையில் தவழக்கூடிய குழந்தை ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள Purdue பல்கலைக் கழக விஞ்ஞானிகளே இந்த ரோபோவினை உருவாக்கியுள்ளனர்.

இதனால் ஆஸ்துமா உட்பட பல்வேறு ஒவ்வாமை நோய்கள் குழந்தைகளில் உண்டாவதை தவிர்க்க முடியும் என நம்பப்படுகின்றது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்