கூகுளில் தவறு இருந்ததை சுட்டிக்காட்டிய பெண்ணுக்கு பரிசு: எவ்வளவு தெரியுமா?

Report Print Gokulan Gokulan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
lankasri.com

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பு பிழையை கண்டறிந்த ஆராய்ச்சியாளருக்கு கூகுள் நிறுவனம் 112,500 டொலர்கள் வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் குவாங் கோங் என்பவர், தான் கண்டறிந்த பிழையை சமர்பித்தார்.

இவரது பிழையை உறுதி செய்த கூகுள் கோங்-க்கு 1,05,000 டொலர்களும், இத்துடன் குரோம் ரிவார்ட்ஸ் திட்டத்தில் கூடுதலாக 7500 டொலர்கள் சேர்த்து மொத்தம் 112,500 டொலர்கள் சன்மானம் வழங்கியுள்ளது.

கூகுள் வரலாற்றில் பாதுகாப்புக்கென இத்தகைய சன்மானம் வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

2017 டிசம்பர் மாத பாதுகாப்பு அப்டேட்டில் மட்டும் 42 பிழைகள் சரிசெய்யப்பட்டதாக கூகுள் தெரிவித்திருக்கிறது.

ஆண்ட்ராய்டு இயங்குதள பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஆண்ட்ராய்டு பாதுகாப்பு ரிவார்ட்ஸ் திட்டத்தில் பிழைகளை கண்டறியும் பாதுகாப்பு ஆய்வாளர்களுக்கு கூகுள் சார்பில் சன்மானம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்