புற்றுநோயை இனி எளிதில் கண்டறியலாம்

Report Print Gokulan Gokulan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
lankasri.com

ஒரே ஒரு ரத்தப் பரிசோதனை மூலம் எட்டு விதமான புற்றுநோயை கண்டுபிடிக்க முடியும் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் மியான்மரில் உள்ள ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக நிபுணர்கள் புற்றுநோய் குறித்து ஆய்வு நடத்தினர்.

ஒரே ஒரு ரத்த பரிசோதனையின் மூலம் கர்ப்பபை, கல்லீரல், வயிறு, கணையம், நுரையீரல், மார்பக பெருங்குடல், உணவுக் குழாய் என 8 விதமான உடல் உறுப்புகளில் ஏற்படும் புற்று நோயை கண்டுபிடிக்க முடியும் என தெரிவிக்கின்றனர்.

இதற்கு அதிக பட்சமாக 500 $ வரை செலவாகுமாம், CancerSEEK என்று அழைக்கப்படும் இந்த சோதனை, எட்டு புற்றுநோயியல் புரதங்களின் அளவை மதிப்பிடுகிறது.

மேலும் இரத்த ஓட்டத்தை ஆய்வு செய்து புற்றுநோய் மரபணு மாற்றங்கள் இருப்பதைக் கண்டறிகிறது.

சுமார் 1005 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் 70 சதவீதம் புற்றுநோய் கண்டறியப்பட்டது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்