எழுத்துக்களை படங்களாக மாற்றும் ரோபோக்கள்: மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் புதிய முயற்சி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
19Shares
19Shares
lankasrimarket.com

மைக்ரோசொப்ட் நிறுவனமானது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினைக் கொண்ட ரோபோ ஒன்றினை வடிவமைத்துள்ளது.

இந்த ரோபோவானது எழுத்துவடிவில் கொடுக்கப்படும் விபரிப்புக்களை படங்களாக மாற்றித்தரக்கூடியதாக இருக்கின்றது.

ஏதாவது ஒரு காட்சியினை எழுத்துவடிவில் விபரிக்கும்போது அக் காட்சியில் உள்ளடக்கப்படவேண்டிய அனைத்து உருவங்களையும் துல்லியமாக இந்த ரோபோவினால் வரைய முடியும்.

அதேபோன்று எதிர்காலத்தில் Bing தேடு பொறியின் ஊடாக ஒரு விடயத்தினை தேடும்போது அதன் படம் அல்லது உருவம் கணனியியால் உருவாக்கப்பட்டு தரக்கூடியதாக இருக்கும்.

இத் தொழில்நுட்பம் கட்டிடக்கலை நிபுணர்களுக்கும் பெரிதும் உதவியாக இருக்கும் என மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்