புதிய நேர அலகினை கண்டுபிடித்தது பேஸ்புக்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
42Shares
42Shares
lankasrimarket.com

நேரக் கணிப்பில் மணித்தியாலம், நிமிடம், செக்கன், மில்லி செக்கன்கள் போன்ற அலகுகள் இருக்கின்றமை அனைவருக்கும் தெரிந்ததே.

எனினும் Flick எனும் புதிய நேர அலகினை பேஸ்புக் நிறுவனம் கண்டறிந்துள்ளது.

இது ஒரு செக்கனின் 705,600,000 ஆவது பெறுமானம் ஆகும்.

இப் பெறுமதியானது நனோ செக்கனை விட பெரிதாகவும், மைக்ரோ செக்கனை விட சிறிதாகவும் காணப்படுகின்றது.

வீடியோ தொழில்நுட்பம் ஒன்றிற்காகவே இந்த புதிய நேர அலகு உருவாக்கப்பட்டுள்ளது.

சாதாரண வீடியோக்கள் 24 FPS எனும் வேகத்தில் இருக்கும்.

இதில் காணப்படும் ஒவ்வொரு பிரேமும் 29,400,000 Flicks நேரத்திற்கு செயற்படும்.

அதேபோன்று 60 FPS வீடியோவில் ஒவ்வொரு பிரேமும் 11,760,000 Flicks நேரத்திற்கு இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்