மெய்நிகர் பொருள்களை கட்டுப்படுத்த உதவும் இலத்திரனியல் ஸ்டிக்கர்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
21Shares
21Shares
lankasrimarket.com

மெய்நிகர் பொருட்கள் (Virtual Objects) என்பது கையால் தொட்டுணர முடியாத பொருட்கள் ஆகும்.

இவற்றினை கை அசைவினால் கட்டுப்படுத்தக்கூடிய இலத்திரனியல் ஸ்டிக்கர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை உள்ளங்கையில் உள்ள தோலின் மீது ஒட்டி கையினை அசைத்தால் போதும் அதற்கு ஏற்றாற்போல் மெய்நிகர் பொருட்கள் அசைய ஆரம்பிக்கும்.

இந்த ஸ்டிக்கர் ஆனது இரு படைகளைக் (Layer) கொண்டுள்ளதுடன் 3.5 மில்லி மீற்றர்கள் தடிப்புடையதாகவும் இருக்கின்றது.

70S2gsmBrk8?rel=0

இதில் காந்தப் புலத்தை உணரக்கூடிய மிகவும் மெல்லிய சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக காந்த புலத்தினை வைத்தே அசையும் திசை தீர்மானிக்கப்படுகின்றது.

குறித்த ஸ்டிக்கரின் செயற்பாட்டினை வீடியோவில் பார்த்து அறிந்துகொள்ள முடியும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்