மருத்துவ ரீதியான பரிசோதனைகளை செய்ய அறிமுகமாகும் இலத்திரனியல் சிப்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
lankasrimarket.com

சிறிய நாணயத்தின் வடிவத்தில் இலத்திரனியல் சிப் ஒன்றினை செய்து அதனைக் கொண்டு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்வது சாத்தியம் என ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

இச் சிப்பானது ஒரு மருத்துவ ஆய்வுகூடத்தினைப் போன்று பல்வேறு வசதிகளை உள்ளடக்கியிருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இரத்தம் உட்பட ஏனைய திரவப் பதார்த்தங்களை இந்த சிப்பின் ஊடாக செலுத்துவதன் மூலம் நோய்களைக் கண்டறிய முடியும் என நம்பப்படுகின்றது.

அமெரிக்காவில் உள்ள Buffalo (UB) பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்களே இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்