மூளையின் சமிக்ஞைகளை கண்டறிய புதிய சாதனம் வடிவமைப்பு

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
59Shares
59Shares
lankasrimarket.com

மூளையினால் பிறப்பிக்கப்படும் இலத்திரனியல் சமிக்ஞைகளை அலை வடிவில் பதிவு செய்யக்கூடிய இலத்திரனியல் சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

ESP 1 எனப்படும் குறித்த சாதனம் ஆர்டினோ (Arduino) டூல்களை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் விலையானது 42 பவுண்ட்களில் இருந்து 59 பவுண்ட்களுக்குள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் நாடுகளின் அடிப்படையில் விலை மாற்றமடைவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.

இவ் வருடம் மே மாதத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ள இச் சாதனம் தற்போது Kickstarter தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு முறை இச் சாதனத்தினை சார்ஜ் செய்தால் தொடர்ச்சியாக 5 மணித்தியாலங்கள் பயன்படுத்த முடியும்.

இதன் செயற்பாட்டினை வீடியோவின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்