செல்போன் ரேடியேசனால் மனிதர்களுக்கு பாதிப்பு இல்லை: புதிய ஆய்வில் தகவல்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
75Shares
75Shares
lankasrimarket.com

செல்போன் சிக்னல்களைக் கடத்தும் கதிர்களால் மனிதர்கள் உட்பட அனைத்து வகையான உயிரினங்களுக்கும் பாதிப்பு இருப்பதாக ஏற்கணவே எச்சரிக்கப்பட்டிருந்தது.

எனினும் புதிய ஆய்வின்படி குறித்த கதிர்களுக்கு மனிதர்களைப் பாதிக்கக்கூடிய வீரியம் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்விற்காக ஆண் எலியைப் பயன்படுத்தியுள்ளனர்.

அதிகளவு ரேடியேசனை உருவாக்கி எலியின் ஆரோக்கியம் கண்காணிக்கப்பட்டிருந்தது.

இதன்போது சிறிய அளவில் எலியின் இதயத்தில் கட்டி வளர்ந்துள்ளது.

கதிர்களின் செறிவு அதிகமாக இருந்தமையினாலேயே இவ்வாறு கட்டி உருவாகியதாகவும், செல்போன் பாவனையில் கதிர்களின் அளவு குறைவாகவே வெளியேறுவதனால் மனிதர்களைப் பாதிக்காது எனவும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதனால் புற்றுநோய், DNA பாதிப்பு என்பன ஏற்படாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்