குற்றவாளிகளை அடையாளம் காண உதவும் ஸ்கேன் கண்ணாடி

Report Print Kabilan in ஏனைய தொழிநுட்பம்
138Shares
138Shares
lankasrimarket.com

சீனாவில் சந்தேகத்திற்குரிய குற்றவாளிகளை அடையாளம் காண, ஸ்கேனருடன் கூடிய உயர் தொழில்நுட்பக் கண்ணாடி ஒன்றை பொலிசார் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த கண்ணாடியில் கமெரா ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக கூட்டத்தில் உள்ள சந்தேகத்திற்குரிய நபர்களைப் படம் பிடித்து, அதைக் கண்ணாடியுடன் பொருத்தப்பட்டுள்ள கைப்பேசி போன்ற சாதனத்திற்கு அனுப்பப்படும்.

அந்த சாதனத்தில், ஏற்கனவே பொலிசார் சேகரித்து வைத்துள்ள தரவுகளின் மூலமாக, சந்தேகத்திற்குரிய நபரின் முகவரி என்ன, தற்போது அவர் எங்கே தங்கியிருக்கிறார், அவர் பயன்படுத்திய இணையதளம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.

ஸெங்சவ் ரயில் நிலையத்தில், நான்கு பொலிஸ் அதிகாரிகள் இந்த கண்ணாடியைப் பயன்படுத்தி குற்றவாளிகளைப் பிடித்துள்ளதாக சீன நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

அத்துடன், இதுவரையில் ஏழு பேர் சந்தேகத்தின் அடிப்படையிலும், 26 பேர் தவறான அடையாள அட்டை உபயோகப்படுத்தியதாகவும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனினும் இந்த கண்ணாடி, தனி மனிதர்களின் அந்தரங்க உரிமையைப் பாதிப்பதாக, மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்